• Breaking News

    மெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது: நடிகர் ஜான் ஆபிரகாம்

    மெட்ராஸ் கபே" படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்றும், தணிக்கைக்குழுவை விட மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் கூறினார். நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்துள்ள "மெட்ராஸ் கபே" படத்தை சூஜித் சிர்கார் இயக்கி உள்ளார். வரும் 23ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இலங்கை உள்நாட்டுப்போரில் 1980களின் பிற்பகுதியையும், 1990களின் தொடக்கத்தையும் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்ட தொகுப்பு  ஏற்கனவே வெளியாகி உள்ளது.

    ஒரு உணவு விடுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதால் இந்தப்படத்துக்கு மெட்ராஸ் கபே என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் "கபே" எங்கே அமைந்துள்ளது என்பது படத்தில் காட்டப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை வலுக்கட்டாயமாக திரும்பப்பெறப்பட்ட பிறகு, "ரா" உளவு அமைப்பின் சார்பில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட ராணுவ அதிகாரி பாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். இலங்கைக்கு போர் செய்திகளை சேகரிக்க சென்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் வேடத்தில் நடிகை நர்கீஸ் பக்ரி நடித்துள்ளார்.

    இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டுப் போராடிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி இந்தப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,  நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் தமிழர் அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

    இந்த எதிர்ப்பு குறித்து நடிகர் ஜான் ஆபிரகாம் கூறுகையில், "மெட்ராஸ் கபே" பட விவகாரத்தில், ஒவ்வொருவரின் கருத்தையும் மதிக்கிறேன். வைகோ, சீமான் ஆகியோரின் கருத்துக்களையும் மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர்களும் எங்கள் கருத்தை மதிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

    இது ஜனநாயக நாடு. இந்தப் படத்தில் அடங்கியுள்ள கதைக்களத்துக்கு தணிக்கைக்குழு ஆட்சேபம்

    தெரிவிக்காமல், "யுஏ" சான்றிதழ் வழங்கி இருக்கிறது என்கிற பட்சத்தில், இந்தப் படத்தில் எதுவும் தவறாக இல்லை என்றே கருதுகிறேன். அவர்கள் போய் தங்கள் ஆட்சேபத்தை எழுப்பட்டும். அதை வரவேற்கிறேன். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் இந்தப் படத்தை நிச்சயம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்போம்" என்றார்.

    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad