வெற்றி யாருக்கு? - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி நாளை.

இப்போட்டிகள் கரவெட்டி ஞானாசாரியார் கல்லுாரி மைதானத்தில் பிற்பகல் 1.00 க்கு ஆரம்பமாகும்.
இச்சுற்றுப் போட்டிகள் 5 ஓவர்கள், மற்றும் 10 ஒவர்கள் கொண்ட பிரிவுகளாக நடைபெற்றிருந்தன.
அதனடிப்படையில் நாளைய இறுதிப்போட்டிகளின் முதலாவது போட்டி 5 ஓவர்கள் பிரிவுக்கானதாக இடம்பெறும். இதில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து வதிரி ஞானவைரவர் விளையாட்டுக் கழக அணி விளையாடவுள்ளது.
தொடர்ந்து இடம்பெறும் 10 ஓவர்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகு விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கரவெட்டி ஐங்கரா விளையாட்டுக்கழக அணி விளையாடவுள்ளது.
இவ்விரு இறுதிப்போட்டிகளிலும் விளையாடவுள்ள நான்கு அணிகளும் வடமராட்சியின் பலம்பொருந்திய அணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments