பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்கா முழுமையான ஆதிக்கம்

3 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றையநாள் ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, இன்றையநாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 460 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
134 ஓட்டங்களுக்கு 4ஆவது விக்கெட்டை இழந்த தென்னாபிரிக்க அணி சார்பாக கிறேம் ஸ்மித், ஏபி.டி.வில்லியர்ஸ் இருவரும் 5ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 326 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் கிறேம் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 227 ஓட்டங்களையும் ஏபி.டி.வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 157 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சயீட் அஜ்மல் 2 விக்கெட்டுக்களையும் சுல்பிகர் பாபர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த பாகிஸ்தான் அணி 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்க, தற்போது தென்னாபிரிக்க அணி 361 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments