Header Ads

ad728
 • Breaking News

  திரைப் பார்வை - "6 Candle "

  tamil-cinema-6-movie-300x194கதை என்னவோ சின்னதாக இருந்தாலும், அதை எடுத்திருக்கும் விதம் நம்மை உட்கார வைக்கிறது. படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கி விடுகிறது. மகனுக்கும், தந்தைக்கும் இடையேயான அன்பை ஒரே பாடல் காட்சியில் விளக்கி கதைக்குள் நேராக செல்கிறார் இயக்குனர். அடுத்தடுத்த காட்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு பதற்றத்தை தோற்றி விடுகிறார்கள்.

  ஐ.டி.யில் வேலை செய்யும் ஷாம், அவரது மனைவி பூனம் கவுர். இவர்களுக்கு ஒரு மகன். அன்பாகவும், அழகாகவும் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.
  6candle_JPG_1593306g


   


  பீச்சுக்கு போகும்போது தனது மகனை தொலைத்து விடுகிறார்கள். போலீஸ் நிலையத்துக்கு ஓடுகிற அவர்களிடம், 'விசாரிக்கிறோம்' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போது இரக்க மனம் படைத்த அதிகாரி ஒருவர், சட்டத்தை நம்புவது வீண் என்று மாற்று வழியை காட்டுகிறார். கிடைக்கிற க்ளுவை வைத்துக் கொண்டு குழந்தையை தேடி புறப்படுகிறார் ஷாம். ஆந்திராவின் நகரியில் ஆரம்பித்து வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என்று தனது குழந்தையை தேடி ஷாம் நடத்தும் வேதனையான பயணம்தான் முழு படமும்.

  இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று ஒரு புறம் பயம் வந்தாலும், மற்றொரு புறம் தன்னையறியாமல் ஆத்திரம் வருவது நிஜம். வெறும் காட்சிகளுக்காக மட்டும் கற்பனையை தட்டிவிடாமல் எங்கெல்லாம் இந்த கொடுமைகள் நடக்கிறதென தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார் துரை.

  நாயகன் ஷாம். இதற்கு முன்பு இப்படிப்பட்ட படம் இவருக்கு கிடைக்கவில்லையே என்று சொல்லி ஆறுதல் பட்டு கொள்ளலாம். அசத்தலான நடிப்பு, அதற்கேற்ற உழைப்பு. கடுமையாக தன்னை வருத்தி கொண்டிருக்கிறார். அதற்காகவே ஒரு சல்யூட்.
  ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6-வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள். தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.

  காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர். அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது தெரிய வருகிறது. இதற்கு போலீஸ் எந்த உதவியும் செய்ய முடியாத சூழலில் தன் மகனைத் தேடி ஷாமே அலைகிறார்.

  குழந்தையை மாநிலம் மாநிலமாக மாற்றி மாற்றி கொண்டு செல்கிறது கடத்தல் கும்பல். அந்த கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்து பின்தொடர்கிறார் ஷாம்.
  போபாலில், மகன் கிடைக்கவிருக்கும் தருணத்தில், தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சும் சிறுமியை உதறவும் முடியாமல், அந்தப் பெண்ணின் சோகத்தைத் தாங்கவும் முடியாமல் ஷாம் பதறுமிடம் அவர் நடிப்பில் எந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறார் என்பதற்கு சான்று. அந்தப் பெண்ணைக் காப்பாற்றி நகரின் பிரதான பகுதிக்கு வரும் அவர் எதிரில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்தைக் காட்டி, 'இங்கே போ.. நல்லவர்கள் இருக்கிறார்கள்.. காப்பாற்றுவார்கள்,' என்று கூறிவிட்டு மீண்டும் மகனைத் தேடிப் போவார். எத்தனை நம்பிக்கை!

  எங்கெங்கிருந்தோ கடத்தப்பட்டு வந்த சிறுவர்களை கொல்கத்தாவின் இருட்டறையில் அடைத்து அழுக்கு குப்பைகளுக்கு மத்தியில் அடித்து உதைத்து சோறுபோடும் காட்சி கண்களைக் குளமாக்கியது. இது சினிமா காட்சி மட்டுமல்ல, நிஜமான உண்மை என்பதை உணர்ந்து மனம் பட்ட பாட்டை எழுத வார்த்தைகளுக்கு வலிமையில்லை. அந்தக் காட்சியில் திரும்பத் திரும்ப 'இது கொடும பாய்... ஏன் இப்படி பண்றாங்க...இவங்கள்லாம் மனுசங்களே இல்லையா' என்ற ஷாமின் வேதனைக் கதறல் இன்னும் காதுகளை விட்டு அகலவில்லை.
  ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமல்ல, இப்படிபட்ட படங்களுக்கும் இசையமைக்க தெரியும் என நிரூபித்திருக்கிறார்
  குழந்தை திரும்பக் கிடைப்பான் என காத்திருந்து வெறுத்து வேதனை மிஞ்சி, 'தொலைந்து போன மகனைத் தேடுவதை விட்டுவிடு.. உனக்கு எத்தனை குழந்தை வேண்டுமானாலும் நான் பெத்துத் தர்றேன்.. நீ திரும்பி வா' என கணவனிடம் போனில் கதறுகிறாள் மனைவி. அவளை ஆற்றுப்படுத்திவிட்டு, தன் மகனைத் தேடும் முயற்சியைத் தொடரும் அந்தத் தந்தையை, தம்பதியை படமாக்கிய யதார்த்தம் இதுவரை பார்க்காதது. அந்தக் காட்சியில் பூனம் கவுர் ஒரு சினிமா நடிகையாகவே தெரியவில்லை.

  அந்தக் க்ளைமாக்ஸ்... அத்தனை இயல்பு...!

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728