• Breaking News

    3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி : ஒருநாள் தொடர் சமநிலையில் முடிவு

    நியூஸிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி டக் வேர்த் லூயிஸ் விதியின்படி 36 ஓட்டங்களால் வென்றது.
    இதனால் 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1:1 விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றுள்ளது.

     

    3 ஆவது போட்டி தம்புள்ளையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

    சீரற்ற காலநிலை காரணமாக இப்போட்டி தலா 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் பிற்பகல் 2.50 மணியளவில் தலா 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

     

    முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் n பற்றது.  திலகரட்ன தில்ஷான் 50 பந்துகளில 53 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 46 பந்துகளில்  46 ஓட்டங்களையும் பெற்றனர்.

     

    நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் நதன் மெக்கலம் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஷம் 26 ஓட்டங்களுக்கு மிஷெல் மெக்கிளகனன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர்.

     

    பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கு 25 ஓவர்களில் 163 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவ்வணி 25 ஓவர்ளகில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களையே பெற்றது.

     

    இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ரங்கன ஹேரத் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சச்சித்ர சேனநாயக்க 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

     

    ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து அணிவென்றமை குறிப்பிடத்தக்கது.

     

    3 ஆவது போட்டியின் ஆட்டநாயகனாக சச்சித்ர சேனநாயக்கவும் சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகனாக திலகரட்ன டில்ஷானும் தெரிவாகினர்.



     

    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple


     


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad