ராதிகாவின் தயாரிப்பில் விக்ரம் பிரபு, தனுஷ்
ராதிகாவின் ராடன் நிறுவனம் மலையாள சினிமா தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறது. லிஸ்டினின் மேஜிக் ஃப்ரேம்ஸ் தயாரித்த ட்ராபிஃக்தான் தமிழில் “சென்னையில் ஒருநாள்” படமானது. சப்பாகுருஸ் படம்தான் புலிவாலாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படங்களை ராடனும், மேஜிக் ஃப்ரேம்ஸும் இணைந்து தயாரித்தன , தயாரிக்கின்றன. இதையடுத்து லிஸ்டனின் இன்னொரு மிகப்பெரிய வெற்றியான உஸ்தாத் ஹோட்டலை தமிழில் மீள்தாயாரிப்பு செய்கிறார்கள். விக்ரம் பிரபு, துல்கர் சல்மான் நடித்த வேடத்தில் நடிக்க உள்ளார். திலகனின் வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பதுதான் கேள்வி.இவை தவிர தனுஷ் நடிக்கும் படத்தையும் ராடன் தயாரிக்க உள்ளது. அது எந்தப் படம் என்ற தகவல் இல்லை.
No comments