முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு திடீர் மாரடைப்பு
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் கார் ஓட்டிச் சென்ற போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனையடுத்து அவர் மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் சிசிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் பால்ய நண்பரான காம்ப்ளி, சச்சினுடன் இணைந்து சிறு வயதிலேயே கிரிக்கெட் களத்தில் இறங்கியவர் ஆவார்.
இளம் வயதில் சாதனைகள் பல செய்தபோதும் அவர் கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசிக்கவில்லை. அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் காம்ப்ளி.
சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றபோது, தன்னை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று பெரிதும் வருத்தம் தெரிவித்திருந்தார் காம்ப்ளி .
No comments