அமலாபாலின் அந்தர் பல்டி
சிந்து சமவெளி புகழ் கிளு கிளு நடிகை அமலா பால் ஆந்திரா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் புதுமுகங்களுடன் நடிக்க மாட்டேன்னு சொன்னதேயில்லை. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் அதர்வா என்ற புதுமுகத்துடனும், மைனாவில் விதார்த் என்ற புதுமுகத்துடனும் நடித்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார் இந்தப் படங்களில் நடித்த போது இவர் ஏதோ பெரிய ஸ்டார் போலவும் இரக்கப்பட்டு புதியவர்களுடன் நடித்தது போலவும் கெத்தாக எடுத்துவிட்டிருந்தார் அந்த பழைய பேட்டியை இங்கே நினைவுகூர காரணம் இருக்கிறது.தெலுங்கு, தமிழில் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களுடன் நடித்த போது அறிமுக நடிகர்களை வேண்டுமென்றே தவிர்த்தவர் அமலா பால். பெரிய நாயகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்வேன் என்று அடம்பிடித்தது அகிலத்துக்கே தெரியும்.
No comments