ஏ.ஆர்.முருகதாஸின் மான்கராத்தே செட் செலவும் மட்டும் 3 கோடியாம்
ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை, வசனம் எழுத அவரின் உதவி இயக்குநர் இயக்கும் படம் தான் மான்கராத்தே. தற்போது இந்த படம் முடியும் தருவாயில் இருக்கிறது இப்போது இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை படமாக ஒரு பிரம்மாண்ட செட் ஒன்றை அமைக்கவிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை முதலில் இரண்டு ஜீனியர் ஆர்டிஸ்டுகளை வைத்து எடுக்கவிருக்கிறார்கள், ஹெலி கேம் பயன்படுத்தி படமாக்கப்படும் இந்த காட்சிக்கான செட் செலவும் மட்டும் 3 கோடியாம். இப்படி பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள் இந்த படத்திற்கு. சிவகார்த்திகேயன் படத்துக்கா இவ்ளோ செலவு. விடுங்க பாஸ் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை இந்த படத்தை காப்பாற்றுமாம்..! வருகிற ஜனவரி 1ம் தேதி படத்தின் முதல் டீசர் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
No comments