ரூ.50 கோடி வருமானத்துடன் பிரபல 100 இந்தியர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமானுக்கு 16வது இடம்
உலகின் செல்வாக்கு மிகுந்த செல்வந்தர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும் 'போர்ப்ஸ்' பத்திரிகை 2013ம் ஆண்டிற்கான 100 பிரபல இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 31-10-2013 நிலவரப்படி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 50.75 கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்து புகழ்பெற்ற இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் 16வது இடத்தை பிடித்துள்ளார்.புகழ்பெற்ற இந்திய பிரபலம் வரிசையில் கடந்த (2012) ஆண்டு 20ம் இடத்தில் இருந்த அவர் தற்போது 24ம் இடத்திற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments