மக்காவ் ஓபன் பேட்மின்டன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்
சீனாவில் நடந்த மக்காவ் ஓபன் கிராண்ட் பிரீ கோல்டு பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.


இறுதிப் போட்டியில் நேற்று கனடாவின் லி மிஷெல்லுடன் மோதிய சிந்து 21-15, 21-12 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி வெறும் 37 நிமிடம் மட்டுமே நீடித்தது. இந்த சீசனில் அவர் பெறும் 2வது கிராண்ட் பிரீ கோல்டு பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மே மாதம் நடந்த மலேசிய ஓபன் தொடரிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
No comments