ஓய்வுபெற்ற சச்சின் இடத்தை டோனியால் நிரப்ப முடியும் : கங்கூலி நம்பிக்கை
தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில், இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் நிச்சயம் தொடரை வெல்ல முடியும்’ என்று இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறினார். இந்திய மட்டைபந்து அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நேற்று தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு கங்குலி நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய மட்டைப்பந்து அணி தென்னாப்ரிக்காவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் இந்த மாதம் முழுவதும் விளையாட உள்ளது.
இந்திய அணிக்கு அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர்கான் திரும்பி உள்ளது வரவேற்கத்தக்கது. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகிய இளம் வேகப் பந்துவீச்சாளர்களும் உள்ளதால், இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சமீபத்தில் ஓய்வுபெற்ற சச்சின் இடத்தை டோனியால் நிரப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்.விராத் கோஹ்லி மீது அவர் முழு நம்பிக்கை வைத்துள்ளார். மட்டைப்பந்து விளையாட்டில் சூதாட்டத்தை மட்டும் பார்க்க கூடாது. நல்லது கேட்டது என்று இரண்டும் மட்டைப்பந்தில் இருக்கிறது. பாரத ரத்னா விருதுக்கு சச்சின் மிகவும் பொருத்தமானவர். இவ்வாறு கங்குலி கூறினார்.

No comments