Header Ads

ad728
  • Breaking News

    அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய சூரி?

    சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் அறிமுகமானவர் சூரி.அந்தப் படத்தில் 50 பரோட்டாக்களை சளைக்காமல் வெளுத்துக் கட்டி­ அப்ளாஸ் வாங்கினார். அதனாலேயே அவரின் பெயர் பரோட்டா சூரி என்றாகிவிட்டது.


    Kai_Movie_Stillsc6069c43d06707b157fbe5f1a54dd898


    ஆனாலும், பரோட்டா சூரி என்று அழைப்பது சூரிக்கு சுத்தமாகப் பிடிக்காது. 'எனக்கு பரோட்டாவே பிடிக்காதுண்ணே' என வெள்ளந்தியாக சிரிப்பார்.இப்போது சந்தானத்துக்கு அடுத்து காமெடி ரேஸில் சூரிக்கு அதிக வேல்யூ இருக்கிறது.


    'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இவர் செய்த காமெடி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.குறைந்த சம்­பளம், பந்தா இல்­லாத நடிப்பு என்ற பிளஸ் பாயின்டால் சந்தானத்தின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் சூரியை மொய்க்கத் துவங்கினர்.


    அதனால்தான் சிம்பு, விஜய் படங்களில் சூரி பிஸியாக இருக்கிறார். தற்போது சூரியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. இதைப் பயன்படுத்தி, தன் சம்பளத்தையும், அதிரடியாக உயர்த்தி விட்டாராம் சூரி.ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த சூரி இப்போது மூன்று லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728