பெண்களை ஒருபோதும் அவமதிக்காதீர்கள் - நடிகர் ஷாருக்கான்
பெண்களை ஒருபோதும் அவமதிக்காதீர்கள் என்று நடிகர் ஷாருக்கான் அறிவுரை வழங்கியுள்ளார். காதலை கொண்டாடும் பல படங்களில் நடித்தவர், நடித்துக் கொண்டிருப்பவர் ஷாருக்கான். இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான் ஆண்களுக்கு சில அறிவுரை வழங்கியுள்ளார். பெண்களை வார்த்தைகளாலோ, செயலாலோ ஒருபோதும் அவமதிக்காதீர்கள். பெண்களுக்கு கதவை திறந்துவிடுவது அவர்கள் அமர்ந்த பிறகு அமர்வது போன்ற சிறு சிறு விஷயங்களில் ஆண்கள் கவனம் செலுத்த வேண்டும். பெண்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். நான் பெண்களுக்கு முன்பு கெட்ட வார்த்தை பேசுவதில்லை. மேலும் பெண்களுக்கு முன்பு கோபப்படுவதையும் தவிர்க்க முயற்சி செய்கிறேன். தன்னுள் இருக்கும் பெண்மையை தொடுபவனே உண்மையான ஆண் மகன். இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
No comments