பாக்யராஜ் ஜோடியாக நடிக்கும் ஸ்வேதா மேனன்
சித்து பிளஸ் டூ படத்துக்குப் பிறகு பாக்யராஜ் கதை, திரைக்கதை வசனத்தில் உருவாகும் படம் துணை முதல்வர். இந்தப் படத்தில் பாக்யராஜே நடிக்கவும் செய்கிறார்.
அரசியலை நையாண்டி செய்யும் படம் இது என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பாக்யராஜ் ஜோடியாக நடிக்க ஸ்வேதா மேனனிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
களிமண்ணு படத்துக்காக தனது நிஜ பிரசவக் காட்சியை படமாக்க அனுமதித்ததன் காரணமாக சர்ச்சைக்குள்ளான ஸ்வேதா மேனன் மீண்டும் தலைப்பு செய்தியானார். இந்தமுறை மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்வேதா மேனனிடம் பொது இடத்தில் அத்துமீறி பாலியல் குறும்பு செய்ததற்காக. அவர் மீது புகார் தந்த ஸ்வேதா மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். சர்ச்சையும் ஸ்வேதாவும் உடன் பிறவா சகோதரிகள்.
தமிழில் கடைசியாக ஸ்வேதா அரவானில் சின்ன வேடம் ஒன்றில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments