இந்தியாவை கலக்க வரும் "POLITICS OF LOVE"
கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிட்டபோது நடந்த சம்பவங்களில் சற்று கற்பனையை கலந்து, காதல் இரசத்தை தடவி படமாக தயாரித்துள்ளனர்.
இதில் அமெரிக்கா வாழ் இந்திய பெண்ணாக நடித்துள்ளார் பாலிவுட் சரவெடி மல்லிகா ஷெராவத்.அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சிக்கு பிரசாரம் செய்பவராக நடித்துள்ள மல்லிகா, குடியரசு கட்சியின் முக்கிய பிரமுகரான நாயகனுடன், காதலில் சிக்குகிறார்.
கொள்கை ரீதியாக வேறுபட்ட கருத்துக்களை கொண்ட இருவருக்கு, காதல் வந்தால் என்ன நடக்கும்? இது தான் இந்த படத்தின் கதைக்கரு. அமெரிக்காவில் ஏற்கனவே திரைக்கு வந்து விட்ட இந்த படம் இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ளது.
No comments