• Breaking News

    பொருள்களைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை



    மட்டக்களப்பு மாவட்டத்தில், பொருள்களைப் பதுக்கும் வியாபாரிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நுகர்வோர் அதிகாரசபையின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் பல்வேறு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது, பல வியாபாரிகள் பொருள்களைக் கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனைச் செய்யாமல், அதிக விலைக்கு விற்பனை செய்தமை, பருப்பு, டின்மீன் போன்ற பொருள்களை களஞ்சியசாலையில் பதுக்கி வைத்திருந்தமை கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன்,  நுகர்வோருக்கு பருப்;பு ஒரு கிலோ 65 ரூபாய்க்கும் டின்மீன் 100 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    அத்துடன் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 35 வியாபார நிலையங்கள்  சுற்றிவளைக்கப்பட்டதுடன், வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் 60க்கும் மேற்பட் வியாபாரிகளிடம் இருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் எனவே ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் போது, அரிசியைக் கட்டுப்பாட்டு விலைக்கு விற்கவேண்டும் என்றும் அதனை மீறி செயற்படும் வியாபாரிகளுக்கும் பொருள்களைப் பதுக்கி வைப்பது, காலவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராகவும் நீதிமன்றத்தின்  ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad