• Breaking News

    இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள்



    சீனாவில்
    பிறப்புகளை பதிவு செய்வதற்கான நிலையான நடைமுறையின் ஒரு பகுதியாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை டி.என். பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒன்று ஆகும். அடையாளம் வெளியிடாத  பெற்றோர்களின் இரட்டை குழந்தைகளின் டி.என். வை பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டதாக பெய்ஜிங் ஜாங்ஜெங் தடயவியல் அடையாள மைய டி.என். ஆய்வாளர் கூறி உள்ளார்.

    தனது இரட்டை குழந்தைகளின் சோதனை முடிவுகளைப் பெற்றபோது அந்த நபர் திகைத்துப் போனார். ஏன் என்றால் இரட்டை குழந்தைகளில் ஒன்றின் டின்.என்.  மாறுபட்டு உள்ளது அது வேறு தந்தைக்கு பிறந்ததை காட்டுகிறது.  இது அவரது மனைவியும் அவரைத் தவிர வேறு ஒருவருடன் உடலுறவு கொண்டார் என்பதைக் குறிக்கிறது என்று சீன ஊடக அறிக்கை.

    டி.என். அறிக்கையை தயாரித்த ஆய்வாளர் டெங் யஜூன் கூறும் போது இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பு 1 கோடியில்  ஒன்றுக்கு வாய்ப்பு உள்ளது.  இரட்டை குழந்தைகளை பெற வேண்டும்  என்றால் முதலில், தாய் ஒரே மாதத்தில் ஒன்றுக்கு பதிலாக இரண்டு முட்டைகளை உற்பத்தி செய்ய வேண்டும். இரண்டாவதாக, இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும். முடிவுகள் குழந்தைகளுக்கு ஒரே தாய் ஆனால் ஒரே தந்தை இல்லை என்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கு குறைந்தது இரண்டு தந்தைகள் உள்ளனர் என கூறினார். வெவ்வேறு தந்தையர்களுடன் பிறந்த இரட்டையர்கள் மிகவும் அரிதான நிகழ்வாகும், இது ஹீட்டோரோபட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது.

    இது சாத்தியமற்றது என்று தோன்றலாம், ஆனால் இரட்டையர்கள் வெவ்வேறு தந்தையர்களுடன் பிறப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். புதிதாகப் பிறந்த குழந்தையின் டி.என். பரிசோதனையை சந்தேகத்திற்கிடமான உறவினர்கள் கோரும்போது மட்டுமே வழக்குகள் வெளிச்சத்திற்கு வரும்.

    ஆனால் ஒரு ஆய்வில், அமெரிக்காவில் 400 இரட்டை பிறப்புகளில் ஒன்று ஹீட்டோரோபட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் பாதிக்கப்படலாம் என்று கூறுகிறது.

    ஒரு தாய் மாதத்தில் இரண்டு முட்டைகளை வெளியிடும் போது வெவ்வேறு ஆண்களிடமிருந்து இரண்டு விந்தணுக்களால் கருவுற்றிருக்கும் போது ஹெட்டோரோபட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் ஏற்படுகிறது.

    மனிதர்களில் ஹீட்டோரோபட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் அரிதானது என்றாலும், நாய்கள், பூனைகள், மாடுகள் மற்றும் கொறித்துண்ணிகள் உள்ளிட்ட பிற விலங்குகளில் இது மிகவும் பொதுவானது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad