• Breaking News

    தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்தியது இங்கிலாந்து


    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

    தற்போது கோடைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால் பலரும் பிரான்சுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், தனிமைப்படுத்தல் காரணமாகவும் இதில் சிக்கல் நிலவி வருகிறது இந்நிலையில், பொருளாதார சிக்கல்களை தவிர்க்கும் விதமாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையே சரக்கு போக்குவரத்தை தடையின்றி மேற்கொள்ள புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது

    இந்த நடைமுறையில் இரு நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ளும் ஓட்டுனர்கள் இனி 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை. இதனால் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்தும் இரு நாடுகளுக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது

    தற்போது வரை இந்த ஆலோசனையில் சுற்றுலா தொடர்பாக முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை

    ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் இந்த ஆலோசனையில் முடிவுகள் எட்டப்படும் பட்சத்தில் இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் அந்நாட்டில் அமலில் உள்ள 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், 14 நாட்கள் தனிமைப்படுதல் நடைமுறை 3 வாரங்களுக்கு ஒரு முறை சீராய்வுக்கு உள்படுத்தப்பட்டு புதிய விதிவிளக்குகள் அமல்படுத்தப்படும் என இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad