• Breaking News

    முந்தானை முடிச்சில் சசிகுமார்



    பாக்யராஜ் இயக்கத்தில் செம ஹிட் அடித்த படங்களில் ஒன்று 'முந்தானை முடிச்சு.' 37 வருடங்களுக்கு முன்பு வந்த இந்தப்படத்தின் ரீமேக்கில் தற்போது நடிக்க இருக்கிறார் சசிகுமார்.  
    முந்தானை முடிச்சு பற்றி சிகுமார் தெரிவிக்கையில்,
    ''சின்ன வயசுல இருந்தே பாக்யராஜ் சாரின் படங்கள் பார்த்துப் பழகினவன் நான். அவரோட மூணு படங்கள் எப்பவும் எனக்கு ஆல்டைம் ஃபேவரைட். இதுல ஒண்ணு 'முந்தானை முடிச்சு.' இந்தப் படத்தை சின்ன வயசுல ரொம்ப ரசிச்சிப் பார்த்திருக்கேன். பாக்யராஜ் சார்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ஆசையிருந்தது. அதுக்காக முயற்சியும் பண்ணேன். ஏற்கெனவே ஒரு படத்தை ரீமேக் பண்றதா இருந்தது. ஆனா, சில காரணங்களால் அது நடக்கல. இந்த நேரத்துலதான் தயாரிப்பாளர் சதீஷூக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கு. அப்போதான் பாக்யராஜ் சாரை நேர்ல மீட் பண்ணிப் பேசினோம். அவரும் எங்ககூட சேர்ந்து வேலை பார்க்க ஆர்வமா இருந்தார். 'முந்தானை முடிச்சு' ஃபேமிலி என்டர்டெய்னர். இதை ரீமேக் பண்ணலாமா?'னு கேட்டேன். உடனே, பாக்யராஜ் சாரும் ஓகே சொல்லிட்டார்.''
     இயக்குநரைத் தேடிட்டு இருக்கோம். 'முந்தானை முடிச்சு' படத்தை அப்படியே ரீமேக் பண்றோம். அதனால, சார் பண்ணுனா வாத்தியார் கேரக்டர்ல நான் நடிக்குறேன். இப்போ இருக்குற யங் ஜெனரேஷன் யாரும் இந்தப் படத்தைப் பார்த்து இருப்பாங்களானு தெரியல. அதனால, இப்போ இருக்குற பசங்களும் ரசிக்கிற மாதிரி படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கோம். கிராமம்தான் கதைக்களம். நல்ல லொகேஷனைத் தேடிக்கிட்டு இருக்கோம். தவிர இது 'முந்தானை முடிச்சு' ரீமேக்தானே தவிர பார்ட்- 2 இல்லை. அதனால படத்தோட பேரும் 'முந்தானை முடிச்சு'தான். இதைவிட பொருத்தமான பேர் இந்தப் படத்துக்குக் கிடைக்காது. ஹீரோயின், மியூசிக் டைரக்டர் யார்னு இன்னும் முடிவாகல. கூடிய சீக்கிரம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். பாக்யராஜ் சாரின் ஃபேமஸான முருங்கைக்காய் சமாசாரம் இந்தப் படத்துல இருக்கும். அதோட சுவை குறையாம நாங்களும் கொடுப்போம். இந்தப் படத்துல வந்த சின்ன கேரக்டர்கூட ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க. அதனால, ரீமேக் பண்றப்போ இதுக்கு ஏத்த மாதிரியான ஆர்டிஸ்ட்டை தேடிட்டு இருக்கோம்.''
    ''ஏவிஎம்-க்கு முழு சம்மதம். பாக்யராஜ் சாரே அவங்ககிட்ட பேசிட்டார். இந்தப் படம் நாங்க பண்றதுல அவங்களுக்கும் சந்தோஷம்தான்.''என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad