• Breaking News

    இங்கிலாந்து போராட்டத்தில் வன்முறை 100 பேர் கைது

    அமெரிக்காவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற வாலிபர் உயிரிழந்ததைக் கண்டித்து அந்த நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளில் நிறவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இங்கிலாந்திலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் இலண்டன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் லண்டனில் கறுப்பின மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அமைதியாக தொடங்கிய இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பொலிஸாரை   தாக்கினர். 

    அதனைத் தொடர்ந்துபொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இருதரப்பு மோதலில் பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேர் உள்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோரை  பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad