• Breaking News

    பாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமானிகள்

    பாகிஸ்தானில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் போலி பைலட் உரிமங்களை வைத்துள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்துள்ளார்

    இது குறித்து அவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில்

      'நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பறக்கும் அனுபவம் இல்லை. போலி உரிமம் வைத்துள்ள பைலட்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பி.. மட்டுமின்றி  தனியார் நிறுவனங்களிலும் போலி விமானிகள் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களையும் இயக்கி வருகின்றனர்' என்றார்.

    அண்மையில் நடந்த கராச்சி விமான விபத்தும் இது போன்ற போலி விமானிகளால் நடந்துள்ளதாக தெரிகிறது. விபத்து நடப்பதற்கு முன் கன்ட்ரோல் ரூமிலிருந்து வந்த எச்சரிக்கையை கவனிக்காமல் பைலட்கள் இருவரும் கொரோனா வைரஸ் குறித்து உரையாடி இருந்ததாக தெரிகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad