• Breaking News

    சீனாவுக்கு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வைரஸ்

     

    கொரோனா எனும் கொடிய வைரஸ் சீனாவில் ஆரம்பமாகமுதல் இத்தாலியின் கழிவு நீரில் இருந்ததற்கான சான்றுகளை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். 

      இத்தாலி நாட்டின் மிலன் , தூரின்  ஆகிய நகரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு நீரை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், சீனாவில் வைரஸ் பாதிப்பு முதன்முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்படுவதற்கு முன்பே வடக்கு இத்தாலியில் வைரஸ் பரவி வந்துள்ளது என தெரிவித்து உள்ளனர். 

    கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் முதல் 2020ம் ஆண்டு பிப்ரவரி வரை வடக்கு இத்தாலியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து 40 கழிவுநீர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனஇதில், இத்தாலிய தேசிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், டிசம்பர் 18 ஆம் திகதி மிலன், தூரின் நகரில் எடுத்த மாதிரிகளில் சார்ஸ் கோவி2 வைரஸ் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    இந்த ஆய்வு, இத்தாலியில் வைரஸ் பரவலுக்கான தொடக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவ கூடும் என அந்த அமைப்பின் ஆய்வாளர்களில் ஒருவரான கிஸ்செப்பினா லா ரோசா கூறியுள்ளார்இதுபற்றிய தகவல் அடங்கிய முழு விவரமும் மற்றும் ஆய்வும் அடுத்த வாரம் வெளியாக கூடும் என அமைப்பின் பெண் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

    நெதர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும், கொரோனா வைரஸ் கழிவுநீரில் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளதுஇதனை தொடர்ந்து பல நாடுகள் கழிவுநீர் மாதிரிகளை சோதனை செய்ய தொடங்கி உள்ளன. 

    பிரான்ஸ் நாட்டில் கடந்த மே மாதத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், டிசம்பர் 27 ஆம் திகதிக்கு முன்பே நபர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டு உள்ளதுஇது, கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபரை பிரான்ஸ் நாடு உறுதி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன் ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்து உள்ளது. 

    தொடர்ந்து, சுற்றுலாவாசிகள் தங்கிய பகுதிகளில் உள்ள கழிவுநீரை வரும் ஜூலையில் இருந்து ஆய்வு செய்ய அந்த அமைப்பு திட்டமிட்டு உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad