• Breaking News

    சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

    ஜனாதிபதி  ஹலிமா யாக்கோப் கடந்த 23 ஆம் திகதி   சிங்கப்பூரின் 13வது  பாராளுமன்றத்தைக் கலைத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல், கொவிட்-19 பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகான தற்போதைய இரண்டாம் கட்டத் தளர்வின்போது நடைபெறும் என்று கூறப்படுகிறது.

     தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய, பிரதமர் லீ சியன் லூங், கோவிட் -19 நிலைமை ஓரளவுக்கு நிலைத்தன்மையை எட்டியுள்ளதால் பொதுத் தேர்தலை இப்போது நடத்த முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.

    தேர்தலுக்குப் பிறகு, கொரோனா கிருமித்தொற்றைக் கையாளுதல், நாட்டின் பொருளியல், வேலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய தேச முன்னேற்றம் தொடர்பான அம்சங்களில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த முடியும் என்றும் அதன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய கடினமான முடிவுகளையும் மேற்கொள்ள  முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad