• Breaking News

    ஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனாவால் இறந்தவரின் உடல்

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மூலம்  மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், உடல்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர் 

     ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலசா நகரில் கொரோனாவால் இறந்த 70 வயது முதியவரின் உடலை நகராட்சி ஊரியர்கள் ஜேசிபி எந்திரத்தில் எடுத்துச் சென்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் இருந்து உடலை ஜேசிபி எந்திரத்தின் மூலம் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வீடியோ பதிவு வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது  

    முன்னாள் நகராட்சி ஊழியரான அவர், வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறிகள் குறித்த சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணம் அடைந்துள்ளார். அவரது உடலை அவமதித்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன 

    இறந்தவரின் உடலை அவமதித்த சம்பவம் தொடர்பாக நகராட்சி ஆணையரும் சுகாதார ஆய்வாளரும்  இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். 

    கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மரியாதைக்குறைவாக கையாளுவது வேதனை அளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad