• Breaking News

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர்ட் பறவையை பாதுகாக்க நடவடிக்கை

     

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர்ட் என்ற பறவை இனத்தை பாதுகாக்க சர்வதேச ஹூபாரா நிதியத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஹூபாரா பஸ்டர்ட் என்பது கானமயில் என்ற பறவையினம். இது வான்கோழி உயரமே கொண்ட புல்வெளிகளில் வாழும் பறவை. தற்காலத்தில் உலகமெங்கும் புல்வெளிகள் அழிக்கப்படுவதால் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இந்த பறவைகள் இடம் பிடித்துவிட்டது.

    ஹூபாரா பஸ்டர்ட் எனப்படும் இந்த கானமயில் பறவையானது பறக்கும் தன்மை கொண்ட பறவைகளிலேயே அதிக எடை கொண்டது. வறண்ட புல்வெளி பகுதிகளில் கானமயில்கள் வாழ்கின்றன. குறிப்பாக மான்கள் வாழும் நிலப்பரப்பு இந்த பறவைக்கு ஏற்ற நிலமாகும். பொதுவாக இந்த பறவை அரிதாக ஆண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடுகிறது. அதுவும் தரையில் இடுவதால் ஆபத்து அதிகம். ஒரு காலத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இவை அதிகம் காணப்பட்டன. 

    எனவே இந்த வகை பறவையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுத்து வரப்படுகிறது. அதிகம் வேட்டையாடப்பட்டதாலும், ஆண்டிற்கு ஒரே முட்டையிடுவதாலும் இந்த பறவை குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகிறது.

     

    இந்த பறவைகளை பாதுகாப்பதற்காக தற்போது   சுற்றுச்சூழல் மற்றும் பருவமாறுபாட்டிற்கான அமைச்சகம் சார்பில் சர்வதேச ஹூபாரா நிதியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஹூபாரா பஸ்டர்ட் பறவைகளை வேட்டையாடுவதை தடுப்பது, இனவிருத்தி செய்து தகுந்த சூழ்நிலையில் விடுவது, இயற்கையான சூழலை ஏற்படுத்துவது, பறவைகள் கணக்கெடுப்பு, அழிந்து வரும் காரணங்கள் குறித்து ஆராய சிறப்பு குழுவினரை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad