• Breaking News

    ஜப்பான் அனுப்பிய ரொக்கெற் கடலில் விழுந்தது

    ஜப்பானைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் ஜப்பான் அரசுடன் இணைந்து பல்வேறு விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த நிறுவனம் மோமோ என்ற பெயரில் புதிய ரொக்கெற்களை தயார் செய்து சோதித்து வருகிறது 

    இதுவரை நான்கு மோமோ ரொகெற்களை நிறுவனம் வெற்றிகரமாக சோதித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று வடக்கு பிராந்தியமான ஹோக்கைடாவில் மோமோ 5 ரொக்கெற்றை  நிறுவனம் விண்ணில் செலுத்தியது 

    ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்து சென்றுகொண்டிருந்தபோது ரொக்கெற்றின்  என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக மோமோ 5 ரொக்கெற் செயலிழந்து அங்குள்ள கடலில் விழுந்தது. இதனால் மோமோ 5 ரொக்கெற்றை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad