• Breaking News

    மீண்டும் பேச்சு நடத்த வட கொரியாவுக்கு அழைப்பு!

    கிழக்காசிய நாடுகளான தென் கொரியாவுக்கும்  வட கொரியாவுக்கும் இடையே  எல்லை உட்பட பல்வேறு விஷயங்களில் நீண்ட காலமாகவே மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில்  வட கொரிய எல்லைக்குள்  தென் கொரிய ராணுவ வீரர்கள் பலுான்களை பறக்க விட்டு விஷம பிரசாரம் செய்ததாக புகார் எழுந்தது. 'இந்த நடவடிக்கையை கைவிடாவிட்டால்  இரண்டு விளைவுகளை சந்திக்க நேரிடும்; எல்லையில் உள்ள இரு நாடுகளின் தகவல் தொடர்பு அலுவலகத்தை குண்டு வைத்து தகர்ப்போம்' என  வட கொரியா  நேற்று முன்தினம் மிரட்டியது.

    இந்நிலையில்  தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெ இன் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின்  அவர் தெரிவிக்கையில்

    வட கொரியாவுடன் அமைதியான நல்லுறவை பின்பற்றவே விரும்புகிறோம். தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்ப்பது போன்ற நடவடிக்கைகள்  எல்லை பிரச்னையை மேலும் மோசமாக்கி விடும்.எல்லா பிரச்னைகளுக்கும்  பேச்சு மூலம்  சுமுக தீர்வு காண தயாராக உள்ளோம்.

    கொரிய அரசு  தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குவதை தவிர்த்து  மீண்டும் பேச்சு நடத்த முன் வர வேண்டும். வட கொரிய ஜனாதிபதிடன் ஏற்கனவே நடத்திய பேச்சின் அடிப்படையில்  இரு தரப்பு பிரச்னைக்கு சுமுக தீர்வு காண தயார். இதற்கு  வட கொரிய அரசு சம்மதிக்க வேண்டும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad