• Breaking News

    ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு இரத்து

      கொரோனா வைரஸ் பரவி வருவதால் ரமோன் மக்சேசே விருது யாருக்கும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த விருது வழங்காமல் விடுபடுவது இது மூன்றாவது முறை ஆகும்.

    விமான விபத்தில் மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி  ரமோன் மக்சேசே நினைவாக ஆண்டுதோறும் அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என்ற 6 பிரிவுகளில் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ரமோன் மக்சேசே விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வந்தது.

    1958-ம் ஆண்டு முதல் மணிலாவை தலைமையிடமாக கொண்டுள்ள ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிற இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது. இது வரை 330 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

    1970-ம் ஆண்டு நிதி நெருக்கடியின் காரணமாகவும், 1990-ம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய நில நடுக்கம் காரணமாகவும் இந்த விருது ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad