• Breaking News

    கொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி

     

     ரஷ்யாவில்  கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசி ஆரம்ப கட்டங்களை கடந்த முன்னேற்றம் கண்டுள்ளது. அடுத்த கட்டமாக அதை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க ரஷியா தயாராகிவிட்டது. 

    இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி, வரும் நாட்களில் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும். தன்னார்வலர்களை தனிமைப்படுத்தி, 2 வாரங்கள் முடிவு அடைகிறபோது, அவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி சோதிக்கப்படும்என கூறி உள்ளது. 

    மேலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும், தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான கமலேயா ஆராய்ச்சி மையமும் இணைந்து ரஷ்ய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நிறைவு அடைகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

    தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் தாங்கிக்கொள்ளும் தன்மையை சோதிப்பதுதான் இதன் முக்கிய குறிக்கோள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் நிலையை எட்டி இருப்பது அந்த நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அங்கு கொரோனா பரவல் தீவிரமாக இருக்கிறது. அங்கு இந்த தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 44 ஆயிரத்து 700- தாண்டி இருப்பதாகவும், பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 200- கடந்து விட்டதாகவும், 2 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad