• Breaking News

    தென்கொரியாவுடனான தொடர்புகளை துண்டிக்க வடகொரியா முடிவு

    தென் கொரியாவுடனான இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளை துண்டித்து கொள்ளும் என வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.

    வடக்கு-தெற்கு கூட்டு தொடர்பு அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் "வடக்கு மற்றும் தெற்கின் அதிகாரிகளுக்கிடையேயான தொடர்புகளை வடகொரியா முற்றிலுமாக துண்டித்து கொள்ளும்.அத்துடன் இன்று முதல் பிற தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இரு தரப்பின் போராளிகளுக்கிடையேயான "கிழக்கு மற்றும் மேற்கு கடல் தொடர்பு இணைப்புகள்", கொரியாக்கள் இடையேயான "சோதனை தொடர்பு பாதை" மற்றும் கொரியாவின் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு மற்றும் தென் கொரியாவின் ஜனாதிபதி  இடையே ஒரு ஹாட்லைன் தொடர்பு ஆகியவை துண்டிக்கப்படும். கடந்த வாரம், வடகொரியா தென்கொரியாவுடனான தொடர்பு அலுவலகத்தை மூடுவதாக அச்சுறுத்தியதுடன், சியோலை பாதிக்க வைக்கும் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக அச்சுறுத்தி இருந்தது.

    கிம்மின் சகோதரி, கிம் யோ ஜாங், தென் கொரியாவுடன் கையெழுத்திட்ட ஒரு இராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அச்சுறுத்தி உள்ளார்.

    கடந்த ஆண்டு ஹனோய் நகரில் கிம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே உச்சிமாநாடு தோல்வி அடைந்ததை தொடர்ந்து வடகொரியா பெரும்பாலும் தென்கொரியாவுடனான தொடர்பை துண்டித்துவிட்டது, அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad