• Breaking News

    பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

    பழம்­பெ­ரும் திரைப்­­டப் பின்னணிப் பாட­கர் .எல்.ராக­வன், மார­டைப்பு கார­­மாக நேற்று வெள்ளிக்கிழமை கால­மா­னார். அவ­ருக்கு வயது 87.

    சென்னை ராயப்­பேட்­டை­யில் வசித்து வந்த அவ­ருக்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்­பட்­டது. உட­­டி­யாக அவரை சென்­னை­யில் உள்ள ராம­சந்­திரா மருத்­துவ மனைக்கு சிகிச்­சைக்­காக கொண்டு சென்­­னர். எனி­னும், சிகிச்சை பல­னின்றி நேற்று காலை அவர் கால­மா­னார். 

    இவ­ரது மனைவி நடிகை எம்.என். ராஜம். இவர் பல்­வேறு படங்­களிலும் நடித்து புகழ்பெற்­­வர். .எல். ராக­வன் தமிழ், தெலுங்கு, கன்­­டத்­தில் ஆயி­ரக்­­ணக்­கான பாடல்­களைப் பாடி­யுள்­ளார்.1950கள் முதல் 1970கள் வரை தமிழ்­த் தி­ரைப்­படப் பாடல்­களில் கொடிகட்­டிப் பறந்­­வர் ராக­வன்.

    1947ஆம் ஆண்டுகிருஷ்ண விஜ­யம்என்ற படத்தின் மூலம் நடி­­ராக சினி­மா­வுக்கு வந்­­வர் இவர். 1950ல் வெளி­வந்தவிஜ­­குமாரிஎன்ற படத்­துக்­காக ஒரு பாடலைப் பாடி­னார். நெஞ்­சில் ஓர் ஆல­யம் படத்­தில்எங்­கி­ருந்­தா­லும் வாழ்கபோன்ற காலத்­தால் அழி­யாத பல பாடல்­­ளை­யும் இவர் பாடி இருக்­கி­றார்.

    அத்துடன், ‘பொம்­பளை ஒருத்தி இருந்­தா­ளாம்’, ‘சீட்­டுக்­கட்டு ராஜா’, ‘என்ன வேகம் நில்லு பாமா’, ‘அங்­­முத்து தங்­­முத்துஉள்­பட பல முத்தான பாடல்­களைப் பாடி­யுள்­ளார்.

    கடை­சி­யாக கடந்த 2014ஆம் ஆண்டுஆடாம ஜெயிச்­சோ­மடாஎன்ற படத்­துக்­காக ஷான் ரோல்­டன் இசை­யில் பாடி­யி­ருந்­தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad