• Breaking News

    இரண்டாவது டெஸ்ட் 3 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து

    இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் ஆகியவற்றுக்கிடையிலான     இரண்டாவது  டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

    மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் எடுத்தது..

     இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட், ஜாஃப்ரா ஆர்சர் ஆகியோர் நீக்கப்பட்டு, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  மேற்கு இந்திய அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

      இங்கிலாந்தின் ரோய் பர்ன்ஸ், டொமினிக் சிப்லி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பர்ன்ஸ் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில்   ரோஸ்டன் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய சக் (0) தான் சந்தித்த முதல் பந்திலேயே ஹோல்டரிடம் பிடிகொடுத்து திரும்பினார். அடுத்து வந்த ஜோ ரூ சற்று நிதானமாக ஆடி 23 ஓட்டங்களை சேர்த்து ஜோசப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ், சிப்லியுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சிறப்பாக ஆடிய சிப்லியும், ஸ்டோக்ஸும்அரை சதம் கடந்தனர். இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

    சிப்லி 86 ஓட்டங்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 59 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

    மேற்கு இந்திய வீரர் ரோஸ்டன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad