Header Ads

ad728
  • Breaking News

    முதலாவது டெஸ்டில் மேற்கு இந்தியா வெற்றி

    இங்கிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட்களால் மேற்கு இந்தியா  வெற்றி பெற்றது

    நாணயச் சுழற்சியில்வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.   ஜேசன் ஹோல்டர் (6 விக்கெட்டுகள்), கேப்ரியல் (4 விக்கெட்டுகள்) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய மேற்கு இந்தியா  முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து  318 ஓட்டங்கள் எடுத்தது  . ப்ரூக்ஸ் 39 ஓட்டங்களும், ராஸ்டன் சேஸ் 47 ஓட்டங்களும், பிராத்வைட் 65 ஓட்டங்களும், விக்கெட் கீப்பர் டவ்ரிச் 61 ஓட்டங்களும் அடித்தனர்.

    இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களும், ஆண்டர்சன் 3 விக்கெட்களும் எடுத்தனர்.

    இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி  நிதானமாக ஆடியது. அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ராய் 42 ஓட்டங்களுடனும், சிப்லி 50 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

    சற்று நிலைத்து நின்று ஆடிய சக் 76 ஓட்டங்களை அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ஓட்டங்கள் எடுத்தது.

    முதல் இன்னிங்ஸில் குறைந்த ஓட்டங்களை எடுத்த இங்கிலாந்து அணி இரண்டாவது இனிங்ஸில் மூன்றுவிக்கெட்களை இழந்து 249 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையளித்தது. அதன் பின்னர் 300 ஓட்டங்கள் எடுப்பதற்கிடையில் ஐந்து விக்கெட்களை இழந்தது.

    இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும்போது தனது இரண்டாவது இன்னிங்சில்  மேற்கு இந்திய அணியை விட 199 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. மேற்கு இந்திய தரப்பில் தரப்பில் அதிகபட்சமாக கேப்ரியல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  மேற்கு இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த மேற்கு இந்திய அணி  27 ஓட்டங்கள் மட்டுமே அடித்திருந்தது.

    பின்னர், ரோஸ்டனுடன் ஜோடி சேர்ந்த பிளாக்வுட் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். ரோஸ்டன் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.ஆனால், நிலைத்து நின்று ஆடிய பிளாக்வுட் 154 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 95 ஓட்டங்கள் விளாசினார்.

    இறுதியில், 6 விக்கெட்டுகளை இழந்த  மேற்கு இந்தியா வெற்றி இலக்கான 200 ஓட்டங்களை எட்டியது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கு இந்தியா வெற்றி பெற்றது.

    137 ஓட்டங்கள் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய மேற்கு இந்திய அணியில் பந்து வீச்சாளர் கேப்ரியல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கு இந்தியா அணி முன்னிலையில் உள்ளது.

     


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728