• Breaking News

    சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

     சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் சட்டமசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    ஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹொங்கொங்கின் தன்னாட்சியை பறிக்கும் செயலாகும் எனக்கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன.

     உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில் ஹொங்கொங்கில்  தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்குப் பதிலடியாகச் சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்டமசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே அமெரிக்காவுடன் வணிகம் செய்வதில் ஹொங்கொங்குக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad