• Breaking News

    36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை

      அபுதாபியில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்தித்தது. பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வினுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் இடம் பெற்றார். 

    பொலார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி ஆட்டம், ரோஹித் சர்மாவின் பொறுப்பான துடுப்பாட்டம், கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 

    முதலில் துடுப்பெடுத்தாடிய‌ மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்கள் எடுத்தது. 192 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெகளை இழந்து 143 ஓட்டங்கள் மட்டுமே அடித்து 48 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

     நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கப்டன் லோகேஷ் ராகுல், முதலில் மும்பையை துடுப்பாடப் பணித்தார் கப்டன் ரோஹித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். காட்ரெல் வீசிய முதல் ஓவரிலேயே குயின்டான் டி காக் (0) விக்கெட்டைப் பரிகொடுத்தார்., முதல் ஓவரி ஓஆட எடுக்கப்படவில்லை. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (10 ஓட்டங்கள்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். 

    இதற்கிடையே, ரோஹித் சர்மா 8 ஓட்டங்கலில் இருந்த போது முகமது ஷமியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் விரலை உயர்த்தினார். பிறகு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி ரோகித் தப்பித்தார். 

    ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மும்பை 83 ஓட்டங்களை எட்டிய போது இஷான் கிஷன் (28 ஓட்டங்கள், 32 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) பந்தை தூக்கிய போது பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

     இதன் பின்னர் ரோஹித் சர்மாவும், பொல்லார்ட்டும் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். ஜேம்ஸ் நீஷத்தின் ஒரே ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்களை ரோகித் சர்மா தெறிக்க விட்டார். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா 70 ஓட்டங்கள் (45 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்)  அடித்து ஆட்டம் இழந்தார். முகமது ஷமியின் பந்து வீச்சில் அவர் விளாசிய பந்தை எல்லைக்கோடு அருகே மேக்ஸ்வெல் பிடித்தார். தடுமாறிய அவர் எல்லைக்கோட்டை கடப்பதற்குள் பந்தை உள்பக்கமாக வீசினார். அதை நீஷம் பிடித்தார். 

    இதைத் தொடர்ந்து கடைசி கட்டத்தில் அமர்க்களப்படுத்திய பொல்லார்ட்- ஹர்திக் பாண்ட்யா கூட்டணி மும்பை அணியின் ஓட்ட எண்ணிக்கையை  தடாலடியாக எகிற வைத்தனர். சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் வீசிய இறுதி ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் பறந்தன. இதில் பொல்லார்ட்டின் ஹாட்ரிக் சிக்சரும் அடங்கும்.


     

    ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின், ஹர்திக் பாண்டியாவும், பொலார்டும் சேர்ந்து பஞ்சாப் அணி பந்துவீச்சை பறக்கவிட்டனர். கடைசி 5 ஓவர்களில் 89 ரன்கள் சேர்க்கப்பட்டது. பொலார்ட், பாண்ட்யா கூட்டணி 67 ரன்கள் சேர்த்தனர்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் களை இழந்து 191 ஓட்டங்கள் குவித்தது. பொல்லார்ட் 47 ஓட்டங்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 30 ஓட்டங்களுடனும் (11 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 89 ஓட்டங்கள் திரட்டி வியப்பூட்டினர்.

      92 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. முந்தைய ஆட்டங்களில் கலக்கிய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் (25 ஓட்டங்கள்) பும்ராவின் பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரும், கப்டனுமான லோகேஷ் ராகுலும் (17 ஓட்டங்கள்) தாக்குப்பிடிக்கவில்லை.  இதனால் நெருக்கடிக்குள்ளான பஞ்சாப் அணியால் வீழ்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.மத்திய வரிசையில் நிகோலஸ் பூரனின் (44 ஓட்டங்கள், 27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பங்குமட்டும் குறிப்பிடும்படி இருந்தது. மேக்ஸ்வெல்லும் (11 ஓட்டங்கள்) சோபிக்கவில்லை. 

    20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில்   வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா, பேட்டின்சன், ராகுல் சாஹர்  ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.  

      அதிரடியாக‌ 20 பந்துகளில் 47 ஓட்டங்கள் (4சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்த பொலார்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


    அதிகமான ஓட்டங்கள் எடுத்த வீரருக்கு வழங்கப்படும் ஒரேஞ்சு நிற தொப்பியை மயங்க் அகர்வாலிடம் இருந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் க‌ப்டன் கே.எல்.ராகுல் பெற்றார். அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதில் ரபாடாவிடம் இருந்து பர்ப்பிள் நிறத் தொப்பி முகமது ஷமிக்கு மாறியது. ஷமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. 4 போட்டிகளில் 2 வெற்றிகள், 2 தோல்விகளுடன் ஓட்ட விகித‌ அடிப்படையில் டெல்லியை அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது மும்பை அணி.

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad