• Breaking News

    தள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி


     

      துபாயில் நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில்   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் சேர்க்கப்பட்டார்.

    நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு கப்டன் விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தைத் தேர்வு    முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி சென்னை அணியின் பந்து வீச்சில் திணறியது. ஆரோன் பிஞ்ச் (2 ), தீபக் சாஹர் வீசிய இன்ஸ்விங்குக்கு காலியானார். தேவ்தத் படிக்கல் (33  ), டிவில்லியர்ஸ் (0), வாஷிங்டன் சுந்தர் (10  ) சீரான இடைவெளியில் முக்கியமான வீரர்கள் வெளியேறினர்..

      கப்டன் விராட் கோஹ்லி மட்டும் நிலைத்து நின்று போராடினார். 15-வது ஓவர் வரை ஆட்டம் சென்னை அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது 4 விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூருவின் நிலை மோசமாக இருந்தபோது தனி ஒருவனாக போராடிய கோஹ்லி வெற்றிக்காக அடித்தளமிட்டார். கடசி  நான்கு ஓவர்களில் 66 ஓட்டங்கள் அடிக்கப்பட்டதால் பெங்களூருவின் வெற்றி சாத்தியமானது. 

    சகலதுறை வீரர் ஷிவம் துபே, கோஹ்லிக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்.. 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்கள் குவித்தது. ஷிவம் துபேவும் (22 ஓட்டங்கள் 14 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்)   விராட் கோஹ்லி 90 ஓட்டங்களுடன் (52 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார்.   சென்னை தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்களும், தீபக் சாஹர், சாம்கர்ரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

      170 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி மறுபடியும் தடுமாறியது.. தொடக்க வீரர்கள் பிளிஸ்சிஸ் ( 8 ), ஷேன் வாட்சன் (14 ) இருவரும் வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.   

    இதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், ஜெகதீசனும் ஜோடி சேர்ந்து அணியின் சரிவை தடுத்தனர். ஆனால் பெங்களூரு பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் திண்டாடினர். 10 ஓவர் வரைஓட்ட விகிதம் 6-க்கும் குறைவாகவே இருந்தது. 

      ஜெகதீசன் (33 ஓட்டங்கள், 28 பந்து, 4 பவுண்டரி) ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த டோனி (10 ஓட்டங்கள்). சாம் கர்ரன் (0), ரவீந்திர ஜடேஜா (7 ஓட்டங்கள்), பிராவோ (7 ஓட்டங்கள்) ஆகியோரும் கைகொடுக்கவில்லை. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ஓட்டங்கள் (40 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார் 

    . 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்களி இழந்து 132 ஓட்டங்கள் எடுத்தது.   பெங்களூரு அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்களும்,, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 

    6-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். 7-வது லீக்கில் விளையாடிய சென்னை அணிக்கு 5-வது தோல்வியாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad