• Breaking News

    அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது - இம்ரான் மஹ்ரூப்

     பல வாரங்களாக முடக்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி இருக்கின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

    அவற்றை ஜனாதிபதி உரையில் உள்வாங்குவார் என்று மக்கள் எதிர்பார்த்த போதும் அது நிறைவேறவில்லை.

    அவரது உரையில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கவில்லை.

    எனவே யானை பசியுடன் காத்திருந்த மக்களுக்கு ஒரு சோளப்பொரியேனும் தராத ஒரு நிலைப்பாடாகவே ஜனாதிபதியின் உரை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    எக்ஸ் பிரெஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்ததை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கடலாமைகள் இறந்துள்ளன. எத்தனையோ டொல்பின்கள், திமிங்கிலங்கள், மீன் இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

    மீனவர்கள் தொழில்களை இழந்துள்ளனர். எனினும் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad