• Breaking News

    விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் 18 பேர் வசமாக சிக்கினர்!

     நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட பல்வேறு சுற்றிவளைப்புகளில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கமைவாக 6 மதுபான சுற்றிவளைப்புகளில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 276.75 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் 281.25 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேலும், ஒரு எரிவாயு சிலிண்டர், ஒரு எரிவாயு அடுப்பு, ஒரு செப்புத்தகடு என்பவற்றையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

    இதேவேளை, நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்ஸரன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தி வந்தவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரலந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வையின்றி இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 220 புகைத்தல் பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கந்தான பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    கெசல்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யோன் வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 12 ஆயிரம் புகைத்தல் பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு - 12 பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிஹிரிபெனன்ன, தல்பே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வை வரியின்றி இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 400 புகைத்தல் பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    தல்பே பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். தனமல்வில, மஹவௌ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 8 சுற்றிவளைப்புகளில் காடழிப்பில் ஈடுபட்ட எண்மர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 19 தொடக்கம் 56 வரையான வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad