யாழ். பல்கலை மாணவர்களால் கிண்ணியாவில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி...!
அண்மையில் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் முறையற்ற பாலம் ஒன்றின் ஊடாக பயணித்த பொதுமக்கள் உட்பட மாணவர்கள் நீருக்குள் மூழ்கி உயிரிழந்ததை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ சமூகத்தால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் அஞ்சலியில் ஈடுபட்டனர்.
மேலும் குறித்த தமது கனவுகளைக் கொண்டு பாடசாலைக்குச் சென்று உயிரிழந்த அந்த மாணவர்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் பல்கலை மாணவர்கள் சமுதாயம் வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை