Header Ads

ad728
 • Breaking News

  சொதப்பிய சென்னை..........!

  csk-bg

  சென்னை சுப்பர் கிங்ஸ்ஸின் தீவிர இரசிகன். போடாத பந்துக்கே டோனி ஆறு அடிக்கோணும் என்று ஆசைப்படுபவன். சென்னை சுப்பர் கிங்ஸ்னா அப்படியொரு வெறி. தல டோனியோட தனிப்பட்ட அபிமானி என்பதையும் தாண்டி சென்னை அணி எப்போதுமே என் தெரிவு. கடைசியாக நடந்த IPL இல் சொதப்பிய சென்னை அணியை குறை சொல்ல முடியாமல் ஒதுங்கியவன். இருந்தும் நேற்றைய ஆட்டத்தை பற்றி அறியாமல் இருக்க முடியவில்லை. 159 ஓட்டங்களுக்குள் அடக்கி விட்டார்கள் என்றுதும் மகிழ்ந்த மனம் , சென்னை ஆட்டத்தை கேட்கையில் கடுப்பாகியது.


  24663

  என்னதான் இவர்களின் பிரச்சினை ?  மட்டைப்பது பற்றி புள்ளிவிபரத்தோட கதைக்க எனக்கு தெரியாது. தனிப்பட்ட கெட்டித்தனங்களின் மதிப்பீடும் கிடையாது . மட்டைப்பந்தை இரசித்து பார்க்கும் ஒரு அப்பாவி இரசிகனாக என் எண்ண ஓட்டங்களையே பதிவிடுகிறேன். புள்ளியும் , விபரமும் தெரிந்து கோலம் போடத்தெரிந்தவர்கள் கோவித்துக்கொள்ள வேண்டாம்.

  முடிந்த IPL இன் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் கொடுக்கும் பேட்டிகளில் டோனி சொல்லிய சாட்டுக்களைச் அப்படியே சாக்குத்தனமாக நம்பிய எனக்கு கிடைத்திருக்கும் சாட்டையடி . டோனி மீதான விமர்சனங்களை சென்னை தலைவனாக இருக்கும் ஒரே காரணத்திற்காக கண்மூடி மறுத்த என் போக்கை திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்வுகள். இதுக்கு மேலயும் நான் திருந்தேல்லை என்றால் நாய் வாலாகத்தான் இருக்க முடியும்.ஒவ்வொரு ஆட்டத்தைக் காணும் போதும் கதிரை நுனிக்கு அழைத்து வந்ததன் பின்னணி என்ன ? மட்டைப்பந்தை சூதாட்டமாக பார்க்கத் தூண்டும் நடத்தைகள்.

  24665
  பணம் கொழிக்கும் வியாபாரமாக மட்டைப்பந்தை மாற்றிவிட்டவகளிடம் ஏமாந்து போன ஒருவனாக. நல்ல அணி ஆனால் முக்கிய சந்தர்பங்களில் அதிஸ்டம் கை கொடுப்பதில்லை என்கிற வெட்டி வாதத்தை விலத்திபார்க்க முயல்கிறேன். நல்ல தலைவனாக டோனியை சித்தரிப்பதை எதிர்க்கிறேன். நல்ல தலைமை என்பது இக்கட்டான சூழலில் பதறாமல் இருப்பது போல் காட்டிக்கொள்வதில்லை, மாறாக அந்த பதற்றத்தை தணிக்க பங்களிப்பு செய்யவேண்டும் என்பதை டோனிக்கு புரியவைக்க வேண்டும். சென்னையின் தோல்விகளுக்கு ஒட்டு மொத்தமாக டோனியை குறை சொல்வது தப்பில்லை. ஏனென்றால் சென்னை அணியின் வெற்றியையும் , பாரட்டுகளையும் மொத்தமாக டோனிக்கு குத்தகைக்கு கொடுத்தவர்கள் நாமல்லவா. அதில் ஒரு நியாமும் இருக்கத்தான் செய்கிறது. நன்றாக விளையாடுவார்களோ இல்லையோ தன் தலைமைக்கும் , பணம் சம்பாதிப்புக்கும் பாதகம் செய்யாதவர்களே அணிக்கு தெரிவு செய்வார் டோனி என்ற குற்றச்சாட்டுள்ளது .


  அவரின் அண்மைய செயற்பாடுகள் ,அவரின் அணித்தெரிவு நபர்கள் அதையே உறுதிப்படுத்துகிறார்கள். தம்பி ரைனா இல்லாட்டி ஒட்டமெடுக்க ஆளில்லாமல்தான் இருக்கிறது. வயசு போன காலத்திலயும் கசி காசிக்கு போகாம இருக்க ஏதோ செய்யுது. முரளி விஜய் என்றொரு தம்பியும் இருக்கிறாராம். பத்திரிநாத்  பயலும் அங்க இங்க திரியுது. அவையள் ஏன் அணியில இருக்கினம் என்று அவைக்கே தெரியுமோ தெரியல. பாவம் பந்தையும் போட்டு , போடுற பந்துக்கும் அடிக்க வேண்டிய நிலையில் அஸ்வின்,பிராவோ.


  24703
  இப்படியே போச்சுன்னா பேரிச்சம் பழம் வாங்கத்தான் சென்னை அணி பயன்படும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் காசு பார்க்க நாங்கள் காய்ந்து ஆட்டம் பார்க்கிறோம். கடுப்பாயிடுவோம்....அப்புறம் நீங்க கண்டமாக வேண்டியிருக்கும். எங்களுக்கு அரவணைக்கவும் தெரியும் அரிவாள் எடுக்கவும் தெரியும் என்கி மறந்திடாதீங்க பயபுள்ளைகளே ..! Be Careful

  - வெட்டி வீராசாமி. 

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728