• Breaking News

    யுத்தகாலங்களில் கூட மாணவர்கள் பதுங்கு குழிகளில் இருந்து கல்வி கற்றார்கள் - பல.நோ.கூ.ச. தலைவர் கேசவதாசன் தெரிவிப்பு

     


    தற்பொழுது நாட்டில் நிலவி வருகின்ற எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பது எங்களுடைய எதிர்கால சமுதாயத்தின் கல்விமான்களை உருவாக்குவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடுமென சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கேசவதாசன் தெரிவித்தார்.


    இன்று சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


    யுத்த காலத்தில் நான் தொண்டராசிரியரா வன்னி பெருநிலப்பரப்பின்  முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொழுது பதுங்குகுழியிலும் பாடம் பயில்வோம் என்ற அடிப்படையில் விமான குண்டு வீசுக்கள் இடம்பெற்ற நிலையில் கூட எங்களுடைய மாணவ செல்வங்கள் பாடசாலைகளில் பொது இளைஞர்களால் அமைக்கப்பட்ட பதுங்குகுழியினுள் இருந்துவிட்டு மீள பாடங்களை கற்றார்கள் .


    அவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் யுத்த காலத்தில் கூட ஐந்து நாட்களும் பாடசாலைகள்  இடம்பெற்றது. சிறந்த பெறுபேறுகளையும் மாணவர்கள் பெற்றிருந்தார்கள். ஆனால் தற்காலத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் மோட்டார் வாகனங்களில் பாடசாலைக்கு சென்று கல்வியை தொடர்ந்தாலும் அதற்கு பழக்கப்பட்டாலும் அருகில் இருக்கக்கூடிய, குறிப்பிட்ட மைல்களுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாகவே சேவைக்கு செல்லமுற்படலாம்.


    மேலும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தலாம் பாடசாலைக்கு வருகின்ற பொழுதும் தூரப்பிரதேசங்களில் இருக்கக்கூடிய ஆசிரியர்களை அதிபர்கள் கோட்டக்கல்வி படைப்பாளர்கள் வலய கல்வி பணிப்பாளர்கள் இணைந்து ஒரு உறுதிப்படுத்தலை மேற்கொள்கின்ற தருணத்திலும் அவர்களுக்குரிய எரிபொருளை வழங்கி ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடாத்த முடியும் என்பது என்னுடைய கருத்தாக காணப்படுவதோடு  மேலும் தென்மாகாணத்தில் அங்கிருக்க கூடிய மாணவர்களுடைய கல்வி நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகள் ஐந்து நாட்களும் இயக்கப்படுகின்றது.


    ஆகவே எங்களுடைய தமிழ் மாணவர்களுடைய எதிர்கால நிலைமை கருத்தில் கொண்டு ஒரு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் என்ற வகையில் எங்களுடைய பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுடைய விபரங்களை ஒரு முறைப்படுத்தி அவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற எரிபொருளுக்கு மேலாக எரிபொருளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நம்மோடு தொடர்பு கொண்டு ஒரு முறைமையை உருவாக்குவதன் மூலம் சங்கானை பல நோக்க கூட்டுறவுசங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு எப்பொழுதும் உதவி புரியும் என்பதை இத்தருணம் தெரிவித்து நிற்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad