தேவை AI — அறிவோம் தமிழில்! - பாகம் 01
நான் ஒரு தகவல்தொழில்நுட்ப துறைசார்ந்தவன். கடல்கடந்து வெளிநாடு சென்று சலித்துப்போய் மீண்டும் மண்ணிற்கு வந்தவன்.
நீண்டகாலமாக அந்த துறையை விட்டு விலகி — இயற்கை விவசாயம், ஊடகவியல், சுற்றுலா, சந்தைப்படுத்தல் என வேறுபல துறைகளில் கவனம் செலுத்தி வந்தேன்.
வயல்வெளியில் மண்ணோடு மல்லுக்கட்டிய கைகள், கமராவை தோளில் தூக்கி செய்திகளை நாடிய கண்கள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டிய அனுபவங்கள், சந்தையில் பொருட்களை மக்களிடம் கொண்டுசேர்த்த நாட்கள் — இவை எல்லாம் என் வாழ்க்கையின் வளமான அத்தியாயங்கள்.
ஆனால்...
AI என்னை மீண்டும் தொழில்நுட்பத்தின் வாசலுக்கு அழைத்து வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு, தேவைகள் என்னை நெருக்கிய ஒரு நாளில் தனிமை மட்டுமே சூழ்ந்திருக்க வெறும் ஆர்வத்தால் ChatGPT-ஐ முதன்முதலாகத் தொட்டேன். அந்த ஒரு தொடுகை — என் மனதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
விவசாயத்தில் களை பிடுங்குவதற்கு மணிக்கணக்கில் செலவிட்ட நேரம்... AI-க்கு ஒரு கேள்வி கேட்டால் நொடிகளில் பதில்! ஊடகவியலில் ஒரு செய்தியை எழுத மணிக்கணக்கில் ஆராய்ந்த அனுபவம்... AI-இடம் விவரித்தால் வினாடிகளில் கட்டுரை!
சந்தைப்படுத்தலில் வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ள வாரக்கணக்கில் தரவுகளை பகுப்பாய்வு செய்த நேரம்... AI அதை நிமிடங்களில் செய்கிறது!
அப்போது உணர்ந்தேன் — இது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல. இது ஒரு புதிய காலகட்டம்.
________________________________________
எனது தேவைக்கு நான் ஆராய்ந்து – கற்றுக்கொண்டு – பயன்பெறும் விடயங்களை ஒரு தொடராக எழுத எண்ணியுள்ளேன். இந்தத் தொடர் ஏன்?
ஈழத்தமிழர்களாகிய எமக்கு ஏற்றதமிழில் AI பற்றிய ஆழமான, எளிமையான, நடைமுறைக்கு உதவும் தகவல்கள் இன்னும் போதுமான அளவில் இல்லை என்பதை உணர்கிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமான எனது ஊடகத்துறைப் பயணம் அண்ணளவாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் தகவல்தொழில்நுட்ப துறைசார்ந்த எழுத்தாளனாக – ’கம்ப்யூட்டர் ருடே’ மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராக மாற்றியிருந்தது. அன்று எதற்கான ’கம்ப்யூட்டர் ருடே’ எனும் முயற்சியை முன்னெடுத்தேனோ அதே காரணங்களால் மீண்டும் ஒரு முயற்சிதான் இது.
தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல — விவசாயி முதல் வியாபாரி வரை, மாணவர் முதல் இல்லத்தரசி வரை, ஊடகவியலாளர் முதல் சுற்றுலா தொழிலதிபர் வரை — அனைவரும் AI-ஐ புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும் என்பதே என் கனவு.
என்னைப் போல் தொழில்நுட்பத்திலிருந்து விலகி வேறு துறைகளில் இருப்பவர்களுக்கும் எமது எண்ணங்களை உடனடியாக செயற்படுத்த உரிய ஊழியர்கள் இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கும் இது இன்னும் அதிகமாக பயன்படும் என்று நம்புகிறேன். ஏனென்றால், நான் உங்கள் கோணத்திலிருந்தே பார்க்கிறேன் — ஒரு வெளியாளின் கண்களால், உள்ளிருந்து விளக்குகிறேன்.
இந்த தொடரில் இப்பொழுது உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இலவச மற்றும் கட்டண AI கருவிகளை வகைவாரியாக அறிமுகப்படுத்துவேன்:
மற்றும் இன்னும் பல...
ஒவ்வொரு கருவியையும் — என்ன செய்யும், யாருக்கு உதவும், எப்படி பயன்படுத்துவது, இலவசமா கட்டணமா — என்று நடைமுறை அனுபவத்துடன் விளக்குவேன்.
________________________________________
இந்தத் தொடரை வெறும் படித்து விட்டு போகாதீர்கள். உங்கள் அனுபவங்களை பகிருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
ஏனென்றால், AI-ஐ அறிவது இனி ஒரு தேர்வு அல்ல — அது இன்றைய காலத்தின் அவசியம்.
தேவை AI — அறிவோம் தமிழில்! — இந்தப் பயணத்தில் நீங்களும் என்னோடு வாருங்கள்! 
அடுத்த பாகம் — AI என்றால் என்ன? ஏன் தேவை? — விரைவில் வருகிறது!
மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை
Tech KO Anu
#TechTamil, #TamilTech #Innovation #FutureTechnology #TechNews #AITools #Automation
#ArtificialIntelligence #AIInnovation #FutureOfAI #TechnologyTrends #DigitalTransformation #AIRevolution #TamilContent #LearnAI
#aiதமிழில் #செயற்கைநுண்ணறிவு #aitools #தமிழ்தொழில்நுட்பம் #DigitalTamil #தேவை_AI_அறிவோம்_தமிழில்! #செயற்கைநுண்ணறிவு #AIதமிழ் #TamilAI #தமிழ்தொழில்நுட்பம் #MachineLearning #GenerativeAI #TechTamil #AIகல்வி #DigitalEducation #FutureTechnology



கருத்துகள் இல்லை