• Breaking News

    மோட்டார் வாகன போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

    மோட்டார் வாகன பதிவுக் கட்டணம் மற்றும் வருடாந்த உரிமக் கட்டணங்களை திருத்தியமைத்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

    நாளை(18) முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் மோட்டார் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தனவினால் வௌியிடப்பட்டுள்ளது. 




       அதற்கமைய,

    ⭕ இயந்திரக் கொள்ளளவு(Engine Capacity) 1,600cc அல்லது அதை விட குறைந்த காரொன்றை பதிவு செய்வதற்கான புதிய கட்டணம் 25,000 ரூபாவாகும்.

    ⭕ இயந்திரக் கொள்ளளவு(Engine Capacity) 1,600cc ஐ விட அதிகம் கொண்ட காரொன்றுக்கான புதிய பதிவுக் கட்டணம் 40,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ⭕ மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கான புதிய பதிவுக் கட்டணம் 3,000 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ⭕ 762 கிலோகிராமுக்கும் குறைந்த பெட்ரோல் பயன்பாட்டில் இயங்கும் காரொன்றுக்கான வருடாந்த வரி உறுதிப் பத்திரத்திற்கான கட்டணம் 2,500 ரூபாவாகும்.

    ⭕ மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கான வருடாந்த வரி உறுதிப் பத்திரத்திற்கான கட்டணம் 900 ரூபாவென அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ⭕ 762 கிலோகிராமுக்கும் குறைந்த டீசல் பயன்பாட்டில் இயங்கும் காரொன்றுக்கான வருடாந்த வரி உறுதிப் பத்திரத்திற்கான கட்டணமாக 3,900 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad