• Breaking News

    கட்டணம் செலுத்த தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க தீர்மானம் விடுக்கப்பட்டுள்ளது.


     

     கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் அடுத்த மாதம் முதல் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

    40 வீதமானோர் கட்டணம் செலுத்த தவறியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொதுமுகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க குறிப்பிட்டார்.

    8,000 மில்லியன் ரூபா வரை காணப்பட்ட நிலுவை தொகை, 4000 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

    எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் 6,000 மில்லியன் ரூபா கட்டணம் நிலுவையில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், 60 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்த தவறிய அனைத்து பயனார்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    சுமார் 08 இலட்சம் மக்கள் 03 மாதங்கள் அல்லது அதற்கும் அதிக நாட்கள்,  நீர் கட்டணம் செலுத்த தவறியுள்ளதாக ஏக்கநாயக்க வீரசிங்க தெரிவித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad