அதிவேக சதம் மட்டுமின்றி மேலும் சில சாதனைகளையும் நியூசிலாந்து படைத்துள்ளது.
ஆண்டர்சன் 14 சிக்சர் அடித்ததன் மூலம், ஒரே போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் 3ம் இடத்தை பிடித்தார். முதல் இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மா உள்ளார். இவர், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 16 சிக்சர் விளாசி 209 ரன்களை குவித்தார். அடுத்த இடத்தில், ஆஸ்திரேலியாவின் வாட்சன் 15 சிக்சர்களுடன் உள்ளார்.
*ஆண்டர்சன் 14, ரைடர் 5, மெக்கல்லம் 3 என நியூசிலாந்து அணி நேற்றைய போட்டியில் மட்டும் 22 சிக்சர் விளாசியுள்ளது. ஒரே போட்டியில் ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்சர் இதுவே. இதுவும் உலக சாதனை. இதற்கு முன் இந்தியா, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 19 சிக்சர் விளாசியது. அது 50 ஓவர். நியூசிலாந்து அடித்திருப்பது வெறும் 21 ஓவரில் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments