• Breaking News

    இந்திய - இலங்கை மகளிர் ஓவர் கிரிக்கட் தொடர்ந்தும் அணித் தலைவி ஷஷிகலா சமரி அத்­தப்­பத்­து

    உலக இரு­ப­துக்கு 20 மகளிர் கிரிக்கட் போட்­டிகள் இவ் வருடம் மார்ச் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்னும் சில தினங்­களில் இந்­தி­யா­வுக்கு புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளது

    அங்கு மூன்று மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­க­ளிலும் மூன்று மகளிர் சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­க­ளிலும் இந்­தி­யாவை இலங்கை எதிர்த்­தா­ட­வுள்­ளது.ஜன­வரி 19, 21, 23 ஆகிய திக­தி­களில் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­களும் ஜன­வரி 25, 26, 28ஆம் திக­தி­களில் சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களும் நடை­பெ­ற­வுள்­ளன.

    இலங்கை மகளிர் அணியின் தலை­வி­யாக ஷஷி­கலா சிறி­வர்­தன தொடர்ந்தும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.சக­ல­துறை வீராங்­க­னை­யான இவர் 73 மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­களில் 69 தட­வைகள் துடுப்­பெ­டுத்­தாடி 1381 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்­றுள்­ள­துடன் பந்­து­வீச்சில் 89 விக்­கட்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார். 30 சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் 27 தட­வைகள் துடுப்­பெ­டுத்­தா­டி­யுள்ள ஷஷி­கலா 369 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். பந்­து­வீச்சில் 32 விக்­கட்­களை வீழ்த்­தி­யுள்ளார்.

    மகளிர் சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் இலங்கை சார்­பாக சதம் குவித்த ஒரே ஒரு வீராங்­க­னை­யான சமரி அத்­தப்­பத்து அணியின் உதவித் தலை­வி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.இவர் 26 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் 782 ஓட்­டங்­க­ளையும் 26 சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் 24 தட­வைகள் துடுப்­பெ­டுத்­தாடி 266 ஓட்­டங்­க­ளையும் பெற்­றுள்ளார்.

    இதே­வேளை சிரேஷ்ட வீராங்­க­னை­க­ளான சந்­த­மாலி தோல­வத்­தவும் சமனி சென­வி­ரட்­னவும் இலங்கை அணி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக சில தினங்­க­ளுக்கு முன்னர் தமக்கு அறி­வித்­த­தாக இலங்கை கிரிக்கட் நிறு­வனம் தெரி­வித்­தது.பயிற்சிப் போட்­டிக்கு 2013 டிசம்பர் 30ஆம் திகதி வருகை தரு­மாறு அழைக்­கப்­பட்ட சந்­த­மாலி அதனை மறுத்­து­விட்டு அணி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­த­தா­கவும் இலங்கை கிரிக்கட் நிறு­வன ஊடகப் பிரிவு தெரி­வித்­தது.

    இதே­வேளை சர்­வ­தேச ஒருநாள் குழாமில் இணைக்­கப்­பட்­டி­ருந்த சமனி சென­வி­ரட்­னவும் தானாக வில­கிக்­கொண்­ட­தாக ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

    ஷஷி­கலா, சமரி அத்­தப்­பத்து ஆகி­யோ­ருடன் பின்­வ­ருவோர் இலங்கை மகளிர் கிரிக்கட் குழாமில் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.ஏஷானி லொக்­கு­சூ­ரிய, தீபிகா ரசங்­கிக்கா, டிலானி மனோ­தரா, சமரி பொல்­கம்­பொல, யசோதா மெண்டிஸ், அனூஷ்கா சஞ்­சீ­வனி, மாதுரி சமு­திக்கா, சந்­திமா குண­ரட்ன, உதே­ஷிக்கா ப்ரபோ­தினி, ஸ்ரீபாலி வீரக்கொடி, லசன்தி மதுஷானி, ஓஷாதீ ரணசிங்க ஆகியோர் குழாமில் இடம்பெறும் ஏனைய வீராங்கனைகளாவர்.

    இவர்களை விட நிலக்ஷி சில்வா, இனோக்கா ரணவீர, சத்துராணி குணவர்தன, ரங்கிக்கா பெர்னாண்டோ ஆகிய நால்வரும் தயார் நிலை வீராங்கனைகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad