• Breaking News

    இன்னொரு வூஹானாக மாறி வரும் சூஃபென்ஹே



    சீனாவின் wuhan இலிருந்துதான் முதன் முதலாக கொரோனா உலகமெங்கும் பரவத் துவங்கியது. இன்றுவரை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சூஃபென்ஹேயில் கொரோனா மீண்டும் பரவத் துவங்கி உள்ளது. சீனாவில் இன்று மட்டும் புதிதாக 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,500 ஆகி உள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருவதால் சீனாவில் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    சீன ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள சூஃபென்ஹேயில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அது மற்றொரு வூகானாக மாறி வருவதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். கொரோனாவின் பிறப்பிடமான வூகானில் கொரோனா கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப் பட்டாலும், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்துள்ள சீனர்களிடம் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இது தவிர, கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படாமல் 57 பேருக்கு புதிதாக சீனாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை சீனாவில் மொத்தம் 82,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3,342 பேர் பலியாகினர். 77,816 பேர் குணமாகி உள்ளனர்



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad