• Breaking News

    ஆர்சிபி அணியில் அடம் ஸம்பா

     


    ஐபிஎல் 2020-லிருந்து விலகிய அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்குப் பதிலாக ஆர்சிபி அணியில் அவுஸ்திரேலியாவின் லெக் ஸ்பின்னர் அடம் ஸம்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

    தனக்கு குழந்தைப் பிறக்கப் போவதால் மனைவியுடன் இருப்பதற்காக கேன் ரிச்சர்ட்ஸன் ஐபிஎல் கிரிக்கெட்டை உதறினார்.

    இந்நிலையில் அவருக்கு மாற்று வீரரை ஆர்சிபி அறிவிக்கும் போது, “அடம் ஸம்பாவை வரவேற்பதில் உற்சாகமடைகிறோம். நாம் தைரியமாக ஆடுவோம் அடம் ஸம்பா என்று தன் ட்விட்டரில் அவரை வரவேற்றுள்ளது.

    ஏற்கெனவே வாஷிங்டன் சுந்தர், சாஹல், மொயின் அலி, பவன் நெகி, என்ற சுழற்பந்து படையில் தற்போது அடம் ஸம்பா ஆர்சிபி அணியில் இணைந்திருக்கிறார்.

    யுஏஇ.யில் பந்துகள் ஸ்பின் ஆகும் என்பதால் ஸம்ப்பாவை இம்முறை பலமாக எதிர்பார்க்கலாம். இவர் ஏற்கெனவே ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக ஆடியுள்ளார். டோனிக்கும் கோலிக்கும் ஸம்ப்பா சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக வீசியுள்ளார், டோனி, கோலி இருவருமே ஸம்ப்பாவிடம் திணறியுள்ளனர்.

    கேன் ரிச்சர்ட்ஸனை ஆர்சிபி அணி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு எடுத்தது, அடம் ஸம்பா விற்கப்படவில்லை.

    ரிச்சர்ட்ஸன், ஸம்ப்பா இருவருமே இங்கிலாந்தில் தற்போது உள்ளனர், அவுஸ்திரேலிய அணிக்காக இவர்கள் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad