• Breaking News

  முதல் போட்டியில் மும்பையை வென்றது சென்னை


   

   13-ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. அபுதாபியில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் மோதின.

  ரெய்னா வெளியேற்றம்,ஹர்பஜன் இல்லை, கொரோனா பாதிப்பு என்பனவற்றால் சென்னையின் பலம் கேள்விக்குறியாக இருந்தது. அவை எல்லாவற்றையும் தாண்டி கப்டன் தோனியின் முடிவால் சென்னை வீறுகொண்டழுந்தது. ராயுடு, பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோரின் அரைச்சதம், ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரின் அதிரடி ஆகியவற்றால் சென்னை ஐந்து விக்கெற்றினால் வெற்றி பெற்றது..  

  நாணயச்சுழற்சியில் வெற்றை பெற்ற சென்னை கப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில்   வெற்றி பெற்றது

    கப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அமர்க்களமாக தொடங்கிய ரோகித் சர்மா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 12 ஓட்டங்களில் (10 பந்து) பியுஷ் சாவ்லாவின் சுழலில் பிடிகொடுத்து வெளியேறினார். மறுமுனையில் சிறிது நேரம் அதிரடி காட்டிய டி காக் 33 ஓட்டங்களில் (20 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

    சவுரப் திவாரியும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து மும்பை அணியின் ஓட்ட வேகத்தை அதிகப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய பாண்ட்யா இரண்டு பிரமாதமான சிக்சர்களை பறக்க விட்டார். இன்னொரு சிக்சருக்கு முயற்சித்து எல்லைக்கோடு அருகே பாண்ட்யா (14 ஓட்டங்கள்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.  சவுரப் திவாரி 42 ஓட்டங்கள் (31 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), பொல்லார்ட்(18 ஓட்டங்கள்), குருணல் பாண்ட்யா (3 ஓட்டங்கள்)  என வரிசையாக வெளியேற மும்பையில் ஓட்ட எண்ணிக்கை குறுகியது.


   

  180 ஓட்டங்களை மும்பை கடக்கும் என எதிர்பார்த்த வேளையில் கடைசி கட்டத்தில் சென்னை பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டனர். 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி 6 ஓவர்களில் அந்த அணி 41 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது.. சென்னை தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சாவ்லா, சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    163ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷேன் வாட்சன் (4 ஓட்டங்கள்)  டிரென்ட் பவுல்ட் பந்துவீச்சிலும், முரளிவிஜய் (1 ஓட்டம்) பேட்டின்சன் பந்து வீச்சிலும் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். இதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர்.

  தொடக்கத்தில் நிதானம் காட்டிய அம்பத்தி ராயுடு அதன் பிறகு அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்து அசத்தியதுடன் ஐ.பி.எல்.-ல் தனது 19-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார்.

   சென்னை 121 ஓட்டங்கள் எடுத்த போது அம்பத்தி ராயுடு 71 ஓட்டங்களில் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ராகுல் சாஹரின் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா (10 ஓட்டங்கள்).  இதன் பிறகு வந்த சாம் கர்ரன் 6 பந்தில் 18 ஓட்டங்கள் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நெருக்கடியை தணித்தார். ஆனாலும் ஆட்டம் கடைசி ஓவருக்கு நகர்ந்ததால் பரபரப்பு தொற்றியது.


  டோனியை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தபோது இடதுகை துடுப்பாட்ட வீரர்களான ஜடேஜாவும்,சாம் கர்ரனும் களம் புகுந்து அதிரடி காட்டினர். 438 நாட்கலின் பினர் டோனி களம் இறங்கினார். முதல் பந்தை டோனி எதிர்கொண்டபோது விக்கெட் கீப்பரின் அக்யில் பந்து சென்றதும் மும்பை வீரர்கள் ஆர்ப்பரிக்க நடுவர் ஒற்றை விரலை உயர்த்தி டோனி அவுட் என்றார். டோனி ஆட்சேபனை தெரிவித்தபோது பந்து பற்ரில் படவில்லை என்ற உண்மை தெரிந்தது. இரண்டு பந்துகளைச் சந்தித்த டோனி ஓட்டம் எடுக்கவில்லை.

  தடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் முதல் 2 பந்தையும் பிளிஸ்சிஸ் பவுண்டரிக்கு விரட்டியடித்து இலக்கை எட்ட வைத்தார்.

  சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில்   வெற்றி பெற்றது. பிளிஸ்சிஸ் 58 ஓட்டங்களுடனும் (44 பந்து, 6 பவுண்டரி), டோனி ஓட்டம் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். மும்பைக்கு எதிராக தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும்.

  மும்பை வீரர் சவுரப்திவாரி, சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே நின்ற அனுபவ வீரர் பாப் டு பிளிஸ்சிஸ் தாவி குதித்து பந்தைப் பிடித்தார். இருப்பினும் தடுமாறிய அவர் பந்தை உள்பக்கமாக மேலே தூக்கிப்போட்டு விட்டு எல்லைக்கோட்டை கடந்தார். பிறகு உடனடியாக மீண்டும் உள்ளே வந்து பந்தைப் பிடித்தார். செய்தார். இதே போல் ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்தையும் பிடித்து பிளிஸ்சிஸ் சிலிர்க்க வைத்தார்.

   

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad